ஊர் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள் - பாராட்டிய தாசில்தார்
ஊர் மக்களின் நீண்ட நாள் கனவு ஒன்றை 14 இளைஞர் ஒன்றிணைந்து நிறைவேற்றிய நிலையில் அவர்களை வட்டாட்சியர் வெகுவாக பாராட்டினார்.
மக்களுக்காக ஒன்றிணைந்த இளைஞர்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஊர் பகுதிக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளனர்.
பின்னர் புத்தாநத்தம் கஸ்பா நலச்சங்கமாக மாற்றி செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் பகுதி மக்களுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில் ஆம்புலன்ஸ் ஒன்றை தங்கள் ஊர் பொதுமக்களின் நிதியுதவியோடு வாங்கி அதை ஜமாத் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைத்தனர்.

பாராட்டிய தாசில்தார்
இந்த நிகழ்வில் நீடுர் இஸ்மாயில் ஹஜ்ரத் பொதுமக்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் தலைவர் ரஹ்மத்துல்லாவிடம் ஒப்படைத்தார்.
இதில் பங்கேற்ற மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி பங்கேற்றார் அப்போது பேசிய அவர், மக்களுக்கு அவசியமான தேவைகளில் ஒன்று இதை ஒன்றிணைந்து செய்த புத்தாநத்தம் கஸ்பா நலச் சங்கத்தினருக்கு எனது பாராட்டுகள் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஊர் பொதுமக்கள், வட்டாட்சியர், புத்தாநத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அபுல் ஹசன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஆனந்தன் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்