பால் பவுடர் பற்றாக்குறை : தனது தாய்ப்பாலை விற்று குழந்தைகளின் பசியை ஆற்றும் இளம்பெண்!

United States of America
By Swetha Subash May 17, 2022 01:47 PM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

தனக்கு அதகளவில் தாய்ப்பால் சுரப்பதால் அதை சேகரித்து வைத்து தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த இளம் தாய் அலிசா ஷிட்டி.

அமெரிக்காவில் பிரபல பால் பவுடர் தயாரிக்கும் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்படவே, அதிக தாய்மார்கள் அலிசாவிடம் தாய்ப்பாலை வாங்கி செல்கின்றனர்.

பால் பவுடர் பற்றாக்குறை : தனது தாய்ப்பாலை விற்று குழந்தைகளின் பசியை ஆற்றும் இளம்பெண்! | Young Mother Sells Her Breastmilk In America

இதுவரை 118 லிட்டர் தாய்ப்பாலை விற்றுள்ள அலிசா லிட்டர் அளவுக்கு விலை நிர்ணயித்து உதவி வருகிறார்.

அமெரிக்காவில் சுமார் 40 சதவீத பால் பவுடர் ஸ்டாக் இல்லாமல் போனதால் அந்நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டுவிட்டது. இதனால் 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகள் பால் பவுடரையே சார்ந்து இருப்பதால் அங்கு பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பால் பவுடர் பற்றாக்குறை : தனது தாய்ப்பாலை விற்று குழந்தைகளின் பசியை ஆற்றும் இளம்பெண்! | Young Mother Sells Her Breastmilk In America

இதனால் குழந்தை பெற்ற தாய்மார்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில் அலிசா போன்ற தாய்மார்கள் தங்களின் தாய்ப்பாலை விற்று பிஞ்சு குழந்தைகளின் பசியை ஆற்றிவருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.