டீச்சரிடம் நகை பறிக்க முயன்றவர்களை வெளுத்து வாங்கிய இளைஞர்கள்

teacher jewelry Tirupathur snatch
By Jon Mar 27, 2021 06:04 AM GMT
Report

டீச்சர் கழுத்தில் தங்கத் தாலி சரடு பறிக்க முயன்ற வாலிபருக்கு பளார் பளார். திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் மங்கையர்க்கரசி பள்ளி ஆசிரியர் இவர் இன்று மாலை ஆசிரியர் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார் .

அப்போது ஒரே பைக்கில் வந்த இரு வாலிபர்கள் மங்கையர்கரசி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க தாலி சரடை பறிக்க முயன்றனர் அப்போது தாலி சரடை இறுக்கிப் பிடித்துக் கொண்ட மங்கையர்கரசி கூச்சலிட்டார். உடனே அப்பகுதி இளைஞர்கள் தாலி சரடை பறிக்க வந்த திருநெல்வேலியை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபர் ஒருவரை பிடித்து நையப்புடைத்து அருகில் உள்ள திருப்பத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய தப்பி ஓடிய கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜா என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது