வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வாலிபர் - துாங்கி கொண்டிருந்த பெண்ணின் கால்களை நீண்ட நேரம் தடவி தொல்லை.!
அமெரிக்காவில் வீட்டினுள் அத்துமீறிய நுழைந்த வாலிபர் ஒருவர் துாங்கி கொண்டிருந்த பெண்ணின் கால்களை நீண்ட நேரம் தடவி கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் கால்களை தடவிய வாலிபர்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26). இவர் கடந்த ஜுலை 1லிருந்து 3-ம் தேதி வரை அதிகாலை நேரங்களில் பூட்டப்படாத 2 தனித்தனி வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
முதலில் பூட்டப்படாத ஒரு வீட்டிற்குள் புகுந்த அவர், அங்கு உறங்கி கொண்டிருந்த பெண்ணின் கால்களின் அருகில் அமர்ந்து கொண்டார்.
பின்னர் அந்த பெண்ணின் உள்ளங்கால்களை நீண்ட நேரம் தடவியுள்ளார். கால்களில் ஏதே உராய்வு ஏற்படுவதை உணர்ந்த அந்த பெண் உறக்கத்தில் இருந்து எழுந்துள்ளார்.
அப்போது மார்க் ஆன்டனி கட்டிலுக்கு அருகே சென்று அமர்ந்து கொண்டார். இதை கண்டு அதிர்ந்து போன அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து மார்க் ஆன்டனி தப்பி ஓடிவிட்டார்.
கைது செய்த போலீசார்
இது போன்று மற்றொரு வீட்டிற்குள் நுழைந்த மார்க் ஆன்டனி இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது கலிபோர்னியா காவல்துறையில் பெண்கள் காலணி திருட்டு,
அத்துமீறி உள்ளே நுழைதல், அத்துமீறி நுழையும் இடங்களில் பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதையடுத்து அவர் ஆகஸ்ட் 1-ந் தேதி அத்துமீறி உள்ளே நுழைதல் மற்றும் அத்துமீறி பிறரை தீண்டுதல் ஆகிய குற்றங்களுக்காக மார்க் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.