கடவுளே எனக்கு ஒரு பெண் தோழி வேண்டும் - ஸ்பீக்கரில் கத்தியபடி வேண்டிய இளைஞர்

China Marriage
By Thahir May 06, 2023 04:38 PM GMT
Report

சீனாவில் நபர் ஒருவர் எனக்கு ஒரு பெண் தோழி வேண்டும் என்றும் ரூ.11 கோடி வேண்டும் என்று ஸ்பீக்கர் வைத்து வேண்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பீக்கர் வைத்து கத்திய இளைஞர் 

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தில் உள்ளது 71 மீட்டர் உயரம் கொண்ட புத்தர் சிலை.

இது டாங் அரசர்களால் கட்டப்பட்டது. உலகின் மிகவும் பெரிய புத்தர் சிலையாக கருதப்படும் இங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

young-man-shouting-into-the-speaker-to-the-buddha

இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்தவர் ஜாங் இவர் தனது வீட்டிலிருந்து 2 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள பெரிய புத்தர் சிலை அமைந்துள்ள சிசுவான் மாகாணத்திற்கு சென்றார்.

இந்த வயசுல எனக்கு என்று ஒரு பெண் தோழி (Girl Friend)கூட இல்லை நான் பணக்காரராக வேண்டும். அதற்காக எனக்கு 10 மில்லியன் யென் ( இந்திய ரூபாய் மதிப்பில் 11.81 கோடி) பணம் இருந்தால் போதும்.

கலாய்க்கும் நெட்டிசன்கள் 

எனக்கு ஒரு பெண் தோழி (Girl Friend) வேண்டும். அவர் அழகாக இருக்க வேண்டும். என்னை அளவுக்கு அதிகமாக காதலிக்க வேண்டும்.

பணத்தை விட என்னை தான் அவர் அதிகமாக காதலிக்க வேண்டும் என் காதலி இளம் வயதினராக இருக்க வேண்டும் எனவும் வேண்டியுள்ளார்.

இந்த வேண்டுதல் நிறைவேற வார இறுதி நாட்களில் 12 மணி நேரம் செலவிட்டு வருவது என முடிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.