நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..
திருமங்கலம் அருகே ஒன்றாக சேர்ந்து மது அருந்திய நண்பர்களுக்கும் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமணன்.
இவரது மகன் அய்யம்பாண்டி (21) நேற்று மாலை இவரது நண்பர்களான மூனாண்டிபட்டியை சேர்ந்த சசி மற்றும் கருவாயன் (எ) வசந்த் உடன் சேர்ந்து தோப்பூர் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சேட்டிலைட் சிட்டி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு எழுந்துள்ளது. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டுள்ளனர்.
பின்னர் அய்யம்பாண்டி அங்கிருந்து கூத்தியர்குண்டு விலக்கு அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் நிற்கும் போது அங்கு வந்த சசியும் கருவாயனும் மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் மூவருக்கும் கைகலப்பானது.
ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஆத்திரமுற்ற சசிவாலிபர் அய்யம்பாண்டியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் அய்யம்பாண்டி இரத்த வெள்ளத்தில் மயங்கி விழவே நண்பர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.
சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அய்யம்பாண்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சைபலனின்றி அய்யம்பாண்டி உயிரிழந்தார்.
பெத்த வந்து சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் தகவலறிந்து வந்த டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சசி மற்றும் கருவாயனை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.