காதலித்த பெண் பேசாததால் இளைஞர் எடுத்த வீபரித முடிவு- கதறிய தாய்!
காதலித்த பெண் பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னையை அடுத்த திருவொற்றியூரை சேர்ந்த சிவலிங்கம். 22 வயதாகும் இவர் மாதவரத்தில் கூலி வேலை செய்துவருகிறார்.இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைக் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுழலில் 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 2 நாட்களாகச் சிவலிங்கத்திடம் பேசாமல் தவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாரிடமும் பேசாமல் சிவலிங்கம் மன உளைச்சலிலிருந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு சிவலிங்கம் தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்ற அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுந்தார்.
தற்கொலை
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.