காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!
காதலியை இம்பிரஸ் செய்வதற்காக, இளைஞர் ஒருவர் புலி கூண்டினுள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலத்தில் உள்ள மணிநகர் நகரில் கன்காரியா லேக் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் குரங்கு முதல் யானை , புலி, ஒட்டகம், என அனைத்து வனவிலங்குகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதனைக் காண நாள்தோறும் மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் இந்த பூங்காவிற்கு வந்த இளைஞர் ஒருவர் பூங்காவில் புலி வசிக்கும் பகுதியின் கூண்டைத் தாண்டி குதித்துள்ளார்.அதன் பிறகு இரும்பு மரத்தின் மீது ஏறி இரும்பு வேலியை தாண்டினார்.
இதனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் மணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இளைஞரைக் கைது செய்தனர்.
இளைஞர்
அப்போது அவரிடம் நடத்தப்பட விசாரணையில் காதலியை இம்பிரஸ் செய்வதற்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இப்படிச் செய்ததாகக் கூறினார். பின்னர் அந்த இளைஞன் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆபத்து மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.