‘’ கெட்டி மேளம் அங்க , கல்யாணம் இங்க ‘’ : கல்யாணத்தில் சும்மா உட்கார்ந்திருந்த கட்டாய தாலிகட்டிய இளைஞன்? வைரலாகும் வீடியோ
கல்யாண வீட்டில் விருந்தினராக உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞரது வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுவதாக கூறுவார்கள்.தமிழகத்தை பொறுத்தவரை திருமணம் என்றவுடன் இரு வீட்டார் சம்மத்துடன் நிச்சயம் செய்து நல்லநாள் குறித்து சொந்தம், பந்தம், உற்றார், உறவினர் இருக்க கெட்டிமேளம் முழங்க மணமகன் கையில் இருக்கும் தாலி மணமகளின் கழுத்தில் கட்டுவார்.
இந்த நிலையில் கல்யாணவீட்டிற்கு வந்த பென்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த வீடியோவில்"திருமணம் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் மணமக்களின் தாலி கட்டும் நேரத்திற்காக காத்திருக்க, இளம்பெண்ணின் பின்னால் இருக்கும் இளைஞர், மணமக்கள் தாலி கட்ட கெட்டிமேளம் வாசிக்கும் போது, தனக்கு முன்னால் அமர்ந்துகொண்டு இருந்த பெண்ணின் கழுத்தில் தாலி போன்ற ஆபரணத்தை போட்டு முடிச்சி போடுகிறார்.
இந்த நிகழ்வுகளை அவருடன் வந்திருந்த நண்பர்கள் திட்டமிட்டு பதிவு செய்ததாக தெரியவருகிறது. பெண்ணும் எந்த எதிர்ப்பும் காண்பிக்காமல் அமைதியாக இருப்பது போன்ற நிகழ்வுடன் வீடியோ முடிவடைகிறது".
இந்த விடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது. யார் அந்த நபர்..? அந்த பெண்ணின் விருப்பத்தின் படிதான் இந்த திருமணம் நடைபெற்றதா என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.