அண்ணாமலைக்கு பைபிள் பரிசு; உடனே அவர் செய்த காரியத்தை பாருங்க - வைரல் வீடியோ!
கிறிஸ்தவர்கள் அண்ணாமலையை சந்தித்து பைபிள் பரிசளித்தனர்.
அண்ணாமலை
தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' யாத்திரை சென்று வருகிறார். இதில் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதுரையை தொடர்ந்து விருதுநகரில் தற்போது யாத்திரை சென்று கொண்டிருக்கிறது. அப்போது கிறிஸ்தவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பைபிள் பரிசளித்தனர்.
பைபிள் பரிசு
உடனே அவர் அதனை வாங்கி கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. முன்னதாக காரைக்குடி செக்காலை சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய இளைஞர் ஒருவர் "குர்-ஆன்" பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.
பைபிளை பரிசளித்த கிறிஸ்தவர்கள்.. கண்ணில் வைத்து ஒற்றிக்கொண்ட அண்ணாமலை..! #Annamalai #EnMannEnMakkal #Virudhunagar #bible pic.twitter.com/xS5IKzmWTj
— velmurugan (@velmurugantheni) August 10, 2023
அதனையும் வாங்கியவர் கண்ணில் வைத்து ஒத்திக்கொண்டார்.
இந்த யாத்திரை ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடந்து வருகிறது. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரை நடத்தப்படுகிறது.