கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - நொடியில் இளைஞருக்கு நடந்த சோகம்!
கோவை அருகே ஒற்றை காட்டு யானையை விரட்ட முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானை
தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் யானைகளின் அட்டகாசம் நிரந்தரமாக இருந்து வருகிறது. காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், காட்டு யானைகள் தொடர்ந்து கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதும் ,
விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதுடன் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் , கோவை மாவட்டம், விராலியூர் குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று புகுந்தது. அப்போது குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட அங்குள்ள இளைஞர்கள் முயற்சியில் ஈடுபட்டனர்.
இளைஞர் உயிரிழப்பு
ஆனால் எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ,கார்த்திக் (24 )என்ற இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் ஹரிஷ் (22)என்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.