ரயில் பயணத்தில் முளைத்த காதல் - மாணவியை 3வதாக திருமணம் செய்த காதல் மன்னன்!
மாணவியை 3வதாக திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3வது திருமணம்
தென்காசி, பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி(25). மதுரை தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது ரயிலில் பயணம் செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
அந்த சமயத்தில், ராஜபாளையத்தைச் சேர்ந்த அருள்ராயன் (40) என்பவர் தன்னை விஜி லென்ஸ் ஆஃபீஸர் என காயத்ரியுடன் அறிமுகமாகியுள்ளார். பின் நட்பாகி அது காதலாக மலர்ந்து 2017ல் மதுரையில் திருமணமும் செய்துள்ளார்.
ஏமாற்றிய இளைஞர்
தொடர்ந்து. 2 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் அருள் ராயன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காயத்திரி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், காயத்ரியின் பெற்றோர் அவரது ஊருக்குச் சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது தான் அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. மேலும், அவர் விஜிலென்ஸ் அதிகாரி இல்லை எனவும் அம்பலமாகியுள்ளது. உடனே, காயத்ரி அவரை பிரிந்து 3 வருடமாக தாய் வீட்டில் வசித்துள்ளார்.
இதற்கிடையில் தன்னுடன் குடும்பம் நடத்த வறுமாறும், இல்லையென்றால் பணம் தரக்கூறியும் மிரட்டியதாக காயத்ரி புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் அருள்ராயனை போலீஸார் கைது செய்துள்ளனர்.