லண்டனில் இந்திய இளம் பெண் குத்திக் கொலை - கதறும் பெற்றோர்
லண்டனில் மேற்படிப்பு முடித்து அங்கு பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேரந்த இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பெண் குத்தி கொலை
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெம்ப்ளி பகுதியில் மற்றவர்களுடன் சேர்ந்து தங்கியிருந்தவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கோந்தம் தேஜஸ்வினி 27 வயதாகும் இவருடன் அதே வீட்டில் பிரேசிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளைஞர் தேஜஸ்வினி என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை குத்திக் கொன்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் 28 வயதுடைய மற்றொரு பெண்ணும் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில் நடந்த கொடூரம்
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரேசில் இளைஞர் உட்பட 2 பேரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
தேஜஸ்வினிக்கு விரையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட செய்தி பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து தேஜஸ்வினி பெற்றோர் பேசுகையில், சம்பவம் குறித்து புதன்கிழமை காலையில் தான் எங்களுக்கு தெரியவந்தது.
என்ன நடந்தது என தெரியவில்லை. லண்டனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தேஜஸ்வினி, தனது மேற்படிப்பை நிறைவு செய்தார்.
அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தோம். எனவே லண்டனில் தற்காலிகமாக பார்த்து வந்த பணியை அவர் ராஜினாமா செய்திருந்தார். மேலும் ஒரு மாதம் மட்டும் பணியாற்றிவிட்டு நாடு திரும்ப முடிவு செய்திருந்தார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.