நான் கதறினேன் என்னோட சத்தம் யாருக்கும் கேட்கவில்லை : கத்தியால் குத்தப்பட்ட டெல்லி பெண் வருத்தம்

Delhi Crime
By Irumporai Jan 05, 2023 09:44 AM GMT
Report

நான் கத்தியால் தாக்கப்படும் போது, சத்தம் போட்டு கொண்டே இருந்தேன். ஆனால், என் அலறல் யாருக்கும் அங்குள்ள யாருக்கும் கேட்கவில்லை. – டெல்லியில் இளைஞரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட இளம்பெண்  கூறியுள்ளார்.

பலமுறை கத்தி குத்து

டெல்லியில் அண்மையில், 21 வயது இளம்பெண் ஒருவரை , ஒரு இளைஞர் தன்னுடன் பேச மறுக்கிறார் என்ற காரணத்துக்காக கத்தியால் பல முறை குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 22 வயதான குற்றவாளி சுக்விந்தர் சிங்கை காவல்துறையினர் கைது செய்தனர். கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நான் கதறினேன் என்னோட சத்தம் யாருக்கும் கேட்கவில்லை : கத்தியால் குத்தப்பட்ட டெல்லி பெண் வருத்தம் | Young Girl Who Was Stabbed By A Young Man

யாருமே வரலை 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் நான் கத்தியால் தாக்கப்படும் போது, கத்திகொண்டே இருந்தேன்.

ஆனால், அந்த இளைஞர் என்னை தாக்கிக் கொண்டே இருந்தார். என் அலறல் யாருக்கும் அங்குள்ள யாருக்கும் கேட்கவில்லை. பின்னர், சில பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைக் காப்பாற்றி என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.’ என இளம்பெண் கூறினார்.