திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பொதுமக்கள் அதிர்ச்சி
விழுப்புரம் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு குப்பத்தை சேர்ந்த குமாரின் மகள் நந்தினிக்கும், நடுக்குப்பத்தை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து டிவி, பிரிட்ஜ், பீரோ, மரக்கட்டில், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசையுடன் 23 சவரன் தங்க நகைகளை மணமகனுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனால் பெற்றோரிடம் மேலும் 7 பவுன் தங்க நகைகள் வாங்கித் வரும்படி இளம்பெண் நந்தினியை கணவர் சிவசங்கர் மற்றும் மாமனார், மாமியார் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த இளம்பெண் நந்தினி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.