கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

pakistanpremierleague PPL2022 PPL sexualharassmant
By Petchi Avudaiappan Mar 28, 2022 07:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் பிபிஎல் எனப்படும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் மிகவும் பிரபலம். இதன் 7வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை காண லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். போட்டியை பார்த்து விட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பும்போது குடும்பத்தினரிடம் இருந்து விலகி வழி மாறிப் போன அப்பெண் அந்த பகுதியில் இருந்த இரண்டு தனியார் பாதுகாவலர்களை அணுகி உதவி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் வழி காட்டுகிறோம் என கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு சகோதரரும், தந்தையும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனியார் பாதுகாவலர்கள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.