சொத்து தகராறில் பெண் என்ஜினீயரைக் கொலை செய்த சித்தப்பா - அதிர்ச்சி தகவல்
திருவள்ளூரில் சொத்து தகராறில் பெண் என்ஜினீயரை அவரது சித்தப்பா சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் பெரியகுப்பம் கே.கே.நகரில் உள்ள கற்குழாய் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவருடைய மகள் சிவரஞ்சனி. இவர், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
சிவரஞ்சினிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தப்பா பாலச்சந்தர் ன்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை சொத்து தகராறு காரணமாக இவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலசந்தர், தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வீட்டில் அமர்ந்திருந்த சிவரஞ்சனியின் முதுகில் குத்தினார். இதில் சிவரஞ்சினி அலறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பாலச்சந்தர், சிவரஞ்சனியின் கழுத்து, மார்பு என 7 இடங்களில் சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சிவரஞ்சனியை அக்கம் பக்கத்தினர் அவரை திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு சிகிசை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவரஞ்சனியின் சித்தப்பாவான பாலச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.