தூக்க கலக்கத்தில் இளம்பெண் செய்த செயல் - கடைசியில் பறிபோன உயிர்

ratpoison younggirldeath
By Petchi Avudaiappan Mar 02, 2022 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயல் அவரது உயிரையே பறித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஷர்வயா என்பவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காலை பல் துலக்குவதற்காக பேஸ்டை எடுத்துள்ளார். அந்த நேரம் பார்த்து அவரது வீட்டில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால் தூக்கக்கலக்கத்தில் ஷர்வயாவுக்கு  பல்துலக்கும்போது பேஸ்ட்டின் சுவை வேறு மாதிரி இருந்துள்ளது. உடனடியாக பேஸ்ட் இருந்த இடத்தில் பார்த்தபோது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். ஷர்வயா டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து உடனடியாக வாயை சுத்தம் செய்த அவர் இதனை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் கேலி செய்வார்கள் என மறைத்ததாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து சரியாக 3 நாட்கள் கழித்து பிப்ரவரி 17 ஆம் தேதி ஷர்வயாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவரை மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காமல் ஷர்வயா பரிதாபமாக உயிரிழந்தார். எலி மருந்தை கவனக்குறைவால் எடுத்துக் கொண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.