3 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி" : போலீசார் தீவிர வலைவீச்சு
ஆந்திராவில் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தையும் மோசடி செய்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நரபுராஜு கன்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார் என்பவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் சுஹாசினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தான் ஒரு அனாதை என அவர் சொன்னதை நம்பிய சுனில்குமார் தன்னை சின்ன வயதில் இருந்து வளர்த்து வந்ததாகவும்,அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி ரூ.6 லட்சம் பணத்தை சுனிலிடம் பெற்றுள்ளார்.
இந்தவிஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வர சுஹாசினியிடம் பணம் கேட்டதும் அவர் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து அவரின் ஆதார் கார்டில் உள்ள முகவரியில் விசாரித்தபோது சுனிலுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் சுஹாசினிக்கு இருந்துள்ளது. இதனை எல்லாம் தெரிந்து கொண்ட அவர் சுனிலுக்கு போன் செய்து தான் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் போலீசுக்கு சென்று பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது வெங்கடேஷுக்கு முன்னால் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவலை கூறினார்.
இதனை அடுத்து திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அடிப்படையில் போலீசார் சுஹாசினியை தீவிரமாக தேடி வருகின்றனர்.