செல்போனை பறித்த திருடன்; மனதை பறிகொடுத்த இளம்பெண் - கதறும் இளைஞர்கள்!
செல்போனை பறித்த திருடனிடம் இளம்பெண் காதலில் விழுந்துள்ளார்.
செல்போன் திருட்டு
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுவேல் என்ற இளம்பெண். தனது மொபைலோடு வெளியில் நடந்துச் சென்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். அந்தப் பெண் அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை.
தொடந்து அந்த திருடன் திருடிய செல்போனை பார்த்துள்ளார். அதில் அந்த பெண்ணின் புகைப்படம் இருந்துள்ளது. இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று நினைத்து மீண்டும் அவரிடம் வந்து திருடியதற்கு மன்னிப்பு கேட்டு, செல்போனை அவரிடமே கொடுத்துள்ளார்.
ஷாக் சம்பவம்
இதில் அந்தப் பெண்ணுக்கு அவர் மேல் காதல் வந்துள்ளது. தொடர்ந்து இருவரும் 2 வருடமாக காதலித்து வருகின்றனர்.
É só no Brasil mesmo….kkkkkkkkkkk. pic.twitter.com/EmrqKfUzZM
— Milton Neves (@Miltonneves) July 21, 2023
இதுகுறித்த வீடியோவை பதிவிட்ட நபர் பிரேசிலில் மட்டுமே இப்படியெல்லாம் நடக்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.