17 வயது சிறுவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண் - பரபரப்பு சம்பவம்!
17 வயது சிறுவனை கடத்தி இளம்பெண் திருமணம் செய்துள்ளார்.
கடத்தல் திருமணம்
வேலூர், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த இளம்பெண்(21) அதே பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இளம்பெண் கைது
இந்நிலையில், அந்த இளம்பெண் சிறுவனை கடத்திச்சென்று யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியினர் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சமூக நலத்துறை விரிவு அலுவலர் மற்றும் குடியாத்தம் போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.