சுற்றுலா வந்த பெண்ணை காதலன் முன் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
கர்நாடகா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமான மைசூரில் உள்ள சாமுண்டி மலை பகுதியில் மலை பகுதியும், ஹெலிபேடும், ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலும் பிரபலமானது. இதனால் இங்கு குடும்பங்கள், பெண்கள் என பலரும் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பகுதிக்கு தனது காதலனுடன் சுற்றுலா வந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். தனது காதலுனுடன் அந்த பெண் அங்குள்ள ஹெலிபேட் அருகே நின்று மலையை ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.
அந்த பெண் பணம் கொடுக்க மறுத்த நிலையில், அவரின் காதலனை அடித்து போட்டுவிட்டு , அங்கேயே அந்த பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் சுயநினைவை இழந்துள்ளார்.
இரவு 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு 1 மணிக்கு அந்த பெண்ணும், அவளின் காதலனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.