கருத்தடை சாதனத்தை அகற்ற சென்ற இளம்பெண் மர்ம மரணம் - பரபரப்பு!
தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்.
கருத்தடை சாதனம்
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர். திவ்யாவுக்கு ஏற்கனவே சிகிச்சையின் மூலம் கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் திவ்யா தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனத்தை அகற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், காலை 7.00 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு திவ்யா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மர்ம மரணம்
ஆனால், காலை 11.00 மணியாகியும், திவ்யாவை பற்றி எந்த தகவலும் இல்லை என்கின்றனர். இதனை அடுத்து உறவினர்கள் சண்டைபோட்டதால், பெண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இதனை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, மாவட்ட சுகாதார துறை சார்பில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.