இளம்பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர் - தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர் ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் தங்கி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது எதிர்வீட்டில் திருப்பூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து வந்துள்ளார். அப்பெண் போட்டித் தேர்வுகளுக்கு படித்து வருகிறார். பல நாட்களாக அப்பெண்ணை கண்ணன் நோட்டமிட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, அப்பெண் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தாள். அப்போது, கண்ணன் மறைந்திருந்து அப்பெண் குளிப்பதை பார்த்துள்ளார்.
இதன் பின், அப்பெண் குளிப்பதை தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து, அப்பெண் நடந்து வரும்போது வழிமறித்த கண்ணன், அப்பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார்.
எனக்கு உன் மேல் ஆசை உள்ளது. என்னிடம் உல்லாசத்திற்கு வர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும், யாரிடமாவது இதைப் பற்றி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இது குறித்து சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.‘
இந்த புகாரை அடுத்து, தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர். விசாரணையில், குற்றத்தை கண்ணன் ஒப்புக்கொண்டதால், அவர் மீது பெண் குளிப்பதை ஆபாசமாக படம் எடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளைச் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.