மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்
புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவன், ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மகள் யோகலட்சுமி.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவம் (MD) இறுதியாண்டு படித்து வந்தார்.
தேர்வுக்கு தயாராகிவந்த யோகலட்சுமி நேற்று முன்தினம் இரவு தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார்.

மறுநாள் காலை வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சடலமாக கிடந்துள்ளார்.
பக்கத்தில் காலியான மயக்க மருந்து பாட்டில் மற்றும் இன்சுலின் ஊசி இருந்துள்ளது.
உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதன்பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில், இந்த முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என எழுதியிருந்தார்.