தொடர்ந்து காரை துரத்தி வந்த இளைஞர்: செல்பி எடுத்த சசிகலா
political
tamilnadu
stalin
By Jon
சசிகலாவின் காரை இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்க, காரை நிறுத்தி அவருடன் சசிகலா செல்பி எடுத்துக்கொண்டார். சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை முடிந்த சசிகலா இன்று தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
சென்னையிலுள்ள ஒரு கோவிலுக்கு சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்பதுடன் வந்து கொண்டிருந்த சசிகலாவின் காரை இளைஞன் ஒருவன் பின்தொடர்ந்து செல்பீ எடுப்பதற்காக துரத்தி வந்துள்ளார்.
உடனடியாக பாதுகாப்புக்கு வந்திருந்தவர்கள் அந்த இளைஞனை துரத்தியுள்ளனர், இதைப் பார்த்த சசிகலா அவர்களை தடுத்ததுடன் இளைஞரை அழைத்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார், இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பானது.