சர்கார் பட பாணியில் "49பி" யை பயன்படுத்திய வாலிபர்
திருச்சியில் 49பி விதிமுறையை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் வாக்கு செலுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர் ரமேஷ் என்ற வாலிபர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990), மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதனால் திகைத்து போன ரமேஷ் தேர்தல் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.
மேலும் அவர் ரமேஷ் என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் '49 P' சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை செலுத்தியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.