ட்ரெண்டாகும் சேலஞ்ச்; 14 வயது சிறுவனின் உயிரை பறித்த ஒரே ஒரு சிப்ஸ் - அதிர்ச்சி!
காரமான சிப்ஸை சாப்பிட்ட சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன் சிப் சேலஞ்ச்
’ஒன் சிப் சேலஞ்ச்’ என்ற சவால் ஒன்று அண்மையில் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சேலஞ்சில் 'பாகுய் (Paqui) என்ற உலகின் மிக காரமான சிப்ஸ் ஒன்றை சாப்பிட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட வேண்டும்.
இந்த சிப்ஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் சாப்பிட்டிடும் வைகையில் மிக அதிகப்படியான காரத்துடன் உருவாக்கப்பட்டது. நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் வழக்கமான காரத்தை விட, இது பல மடங்கு அதிகம் காரமானது. இந்த சிப்ஸ் பாக்கெட்டிலேயே அதன் பக்கவிளைவுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
பலியான சிறுவன்
இந்நிலையில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் 14 வயதான ஹாரிஸ் வாலோபா என்ற சிறுவன்' ஒன் சிப் சேலஞ்ச்’ டிரெண்டில் பங்கேற்று வைரலாக ஆசைப்பட்டு தனது பள்ளியில் இந்த சிப்ஸை சாப்பிட்டுள்ளார்.
இதனால் சில நொடிகளிலேயே இந்த சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்துக்கொண்டிருந்த சிறுவனை உடனடியாக ஆசிரியர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் ஹாரிஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாரிஸின் தாய் லூயிஸ் "தனது மகனின் இறப்புக்கு அவர் சாப்பிட்ட காரமான சிப்ஸ் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.