2011 உலகக்கோப்பையில் பங்கேற்ற அர்ஜூன் டெண்டுல்கர், ப்ரித்வி ஷா - வைரல் புகைப்படம்
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இளம் கிரிக்கெட் வீரர்களான அர்ஜூன் டெண்டுல்கர், ப்ரித்வி ஷாவும் பங்கேற்றுள்ள புகைப்படங்கல் வைரலாகியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற உலக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக உலக்கோப்பையை வென்று அசத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை எந்தவொரு கிரிக்கெட் ரசிகரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது.
கடைசி ஓவரில் தோனி அடித்த சிக்ஸை கண்டு ஒட்டுமொத்த இந்திய தேசமும் மிரண்டு போனது. அன்றைய இரவு வானம் மொத்தமும் வாணவேடிக்கைகளால் நிறைந்து நள்ளிரவு நேரத்தில் திருவிழா கோலம் பூண்டது. இவையெல்லாம் நடந்து 11 ஆண்டுகள் ஆனபோதிலும் நேற்று தான் நடந்தது போல உள்ளது என இன்றளவும் ரசிகர்கள் சிலாகிக்கும் அளவுக்கு இப்போட்டி மேஜிக் நிறைந்தது.
இப்போட்டியை ஏராளமான பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்த நிலையில், இளம் கிரிக்கெட் வீரர்களான அர்ஜூன் டெண்டுல்கரும், ப்ரித்வி ஷாவும் குழந்தை பருவத்தில் மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அதன்பின் இந்தியா இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் டிராபி, நான்கு டி20 உலகக்கோப்பை என ஆடி விட்டாலும் பழைய அணியும், வெற்றியும் இல்லாமல் போனது ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் வருத்தமளிக்க கூடிய நிகழ்வாகவே உள்ளது.