எனது கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? - பிரதமருக்கு சவால் விடும் மம்தா!

mamata pmmodi
By Irumporai Jun 01, 2021 10:58 AM GMT
Report

அஞ்சி நடுக்குபவர்களுக்குத்தான் மரணம். என் கதையை உங்களால் முடிக்க முடியாது என்று பிரதமர் மோடியை விமர்சித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார்.

மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் பெரும் பிரச்சினையாக  மாறி வருகிறது.

யாஸ் புயல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில்  மம்தா கலந்து கொள்ளாத சம்பவம் சர்ச்சையானதால்  கோபம் கொண்ட மத்திய அரசு மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாயை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது நாம் அறிந்த கதை.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி பிரபல பாலிவுட் படத்த்கின் முக்கியமான வசனம் ஒன்றை பேச்சில் குறிப்பிட்டார்.

அதில், அச்சபடுபவர்கள் மரணிப்பது உறுதி நாங்கள் யாருக்கும் அஞ்ச கூடியவர்கள் கிடையாது என கூறினார்.

 மத்திய அரசு கொரோனா தடுப்பு என்று பல விஷயங்களில் தோல்வி அடைந்துவிட்டது. இதை மறைக்க வேண்டும் என்பதற்காக கவனத்தை திசை திருப்புகிறது.

ஆகவே மாநில அரசுகளை சீண்டி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புகிறது. என்று பேசிய மம்தா . மிஸ்டர் மன் கி பாத் பிரதமரேஎனது கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது எனக்கு பயம் இல்லை என கூறினார்.