ஒரு நைட்டுக்கு மட்டும் இந்த நாட்டை வாடகைக்கு வாங்கலாம் - எந்த நாடு தெரியுமா?
ஒரு நாடு முழுவதையும் வாடகைக்கு எடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நாடு வாடகைக்கு..
சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள சிரிய நாடு லிச்சென்ஸ்டீன். சுமார் 40,000 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த நாட்டை அதிக விலை கொடுத்து வாடகைக்கு எடுக்கலாம்.
ஒரு இரவுக்கு இந்த முழு நாட்டையும் வாடகைக்கு எடுப்பதற்கு 70,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.60 லட்சம்) செலவாகும். பிரபலமான தங்குமிட தளமான AirBNB-ல் லிச்சென்ஸ்டைன் நாடு பட்டியலிடப்பட்டது.
லிச்சென்ஸ்டீன்
இதனை வாடகைக்கு எடுப்பவர்களின் நிகழ்வு விவரங்கள் நாட்டின் தெருப் பலகைகள் மற்றும் அவர் செல்லும் பகுதி முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் உட்பட நாட்டின் சில முக்கியமான இடங்களுக்குச் செல்ல விருந்தினர்களுக்குத் தடையற்ற அணுகல் வழங்கப்பட்டது.
இந்த நாட்டை ஆளும் மன்னரே தனிப்பட்ட முறையில் நாட்டின் சாவியை உங்களிடம் ஒப்படைப்பார். ஆனால், இந்த வாடகைக்கு எடுக்கும் வாய்ப்பு 2011 முதல் நிறுத்தப்பட்டது.
ஆனால் இன்றும் இங்கு வரும் விருந்தினர்கள் பிரத்தியேகமான தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் மற்றும் நாட்டின் இயற்கை அழகை அனுபவிக்க முடியும்.