PF பணத்தை இனி எளிதாக எடுக்கலாம்.., எப்படி தெரியுமா?
PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகளை இபிஎப் நிர்வாகம் எளிதாக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
PF பணத்தை எளிதாக எடுக்கலாம்
PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள் தற்போது எளிதாக்கப்பட்டுள்ளன. அதாவது தொழிலாளர்கள் இனி PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும்போது வங்கிக்கணக்கு புகைப்படங்கள் மற்றும் செக் லீஃப் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சோதனை முறையில் வெற்றிகரமாக உள்ளதால் அதை முழுமையாக செயல்படுத்த இபிஎப் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, UAN எண்ணுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கு தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமும் 36 ஆயிரம் பேர் வரை வங்கி கணக்கை இணைக்க கோரிக்கை வைக்கின்றனர். இதற்கான நேரம் 3 நாட்கள் வரை ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதனை எளிதாக்கும்படியான புதிய நடைமுறை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.