UPI, ATM மூலம் ஈஸியா PF பணம் எடுக்கும் வசதி - வெளியான அறிவிப்பு!

India Money
By Vidhya Senthil Mar 26, 2025 06:26 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

PF கணக்கில் இருந்து ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி வரும் மே மாத இறுதியில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PF கணக்கு

வருங்கால வைப்புநிதி கணக்கை தொழிலாளர்கள் எளிதாக கையாளும் வகையில் EPFO 3.0 என்ற தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

UPI, ATM மூலம் ஈஸியா PF பணம் எடுக்கும் வசதி - வெளியான அறிவிப்பு! | You Can Easily Withdraw Pf Money Up

இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு விளக்கம் அளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா, புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வங்கி சேவைக்கு இணையாக மிகப்பெரிய மாற்றத்துடன் வருங்கால வைப்புநிதி அமைப்பு செயல்படும் என தெரிவித்தார்.

மேலும் வங்கிக் கணக்கில் இருப்பை பார்ப்பது போல, யுபிஐ செயலிகள் மூலமாக கணக்கில் உள்ள இருப்பை தெரிந்துகொள்ள முடியும் எனவும், தானியங்கி முறை மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் எடுக்க முடியும் என தெரிவித்தார்.

மேலும் புதிய நடைமுறை மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு வரும் எனவும் தொழிலாளர் நலத்துறை செயலாளார் சுமிதா தவ்ரா கூறியுள்ளார்.