மருத்துவ படிப்புகளுக்கு 22-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
Government of Tamil Nadu
By Thahir
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 22-ந் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பாண்டான 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வருகிற 22ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வருகிற 21ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் அதிகார இணையத்தளமான www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.net என்ற இணையத்தள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.