நீங்கள் தான் கடவுள்...செவிலியர்களுக்காக தரையில் விழுந்து வணங்கிய டீன்!

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச செவிலியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்,கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

அங்கு நிகழ்ச்சிக்கு வருகை தந்த, கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், தற்போதைய நெருக்கடியான சூழலில் நீங்கள் தான் கடவுள் எனக் கூறி, கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, செவிலியர்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்