கொரோனாவை கையாள தவறிய பிரதமர் பதவி விலகல்!

covid19 yoshihidesuga japanpm
By Petchi Avudaiappan Sep 03, 2021 08:54 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிதே சுகா பதவி விலக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே கடந்தாண்டு உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக யோஷிஹிதே சுகா பதவியேற்றார்.

அவர் தலைமையிலான அரசு கடந்த இருஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது.

மேலும் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவலின் மத்தியில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தியதற்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் யோஷிஹிதே சுகா, இம்மாத இறுதியில் நடைபெற உள்ள கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

அந்நாட்டு வழக்கப்படி ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார். அந்த வகையில் சுகாவின் ஓராண்டு ஆட்சி முடிவுக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.