அவர் தலையில் துப்பாக்கியால் சுட நினைத்தேன் - யுவராஜ் தந்தை பகீர்
கபில்தேவை, துப்பாக்கியால் சுட விரும்பியதாக யுவராஜின் தந்தை தெரிவித்துள்ளார்.
யோக்ராஜ் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவரும் இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் யோக்ராஜ் சிங் அளித்த பேட்டி ஒன்றில், கபில் தேவ் இந்திய அணி, வடக்கு மண்டலம் மற்றும் ஹரியானா அணி கேப்டனாக இருந்த போது எந்த காரணமும் இல்லாமல் என்னை அணியில் இருந்து நீக்கினார்.
இது தொடர்பாக கபில்தேவிடம் எனது மனைவி பல கேள்விகளை கேட்க விரும்பினார். ஆனால், அந்த நபருக்கு பாடம் கற்பிப்பேன் என அவரிடம் கூறினேன். இதற்காக எனது பிஸ்டலை எடுத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றேன்.
பகீர் பேட்டி
அப்போது, கபில்தேவ் தாயாருடன் வெளியே வந்தார். அவரை பல முறை விமர்சித்ததுடன், உங்களைால் எனது நண்பர் ஒருவரை இழந்தேன். இன்று நீங்கள் செய்ததற்கான பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும் எனக்கூறினேன்.
உங்கள் தலையில், சுட வேண்டும் என விரும்பி இங்கு வந்தேன். ஆனால், உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் அதனை செய்யவில்லை என்றேன். அந்த தருணத்தில் தான் இனிமேல் நான் கிரிக்கெட் விளையாடக்கூடாது.
யுவராஜ் கிரிக்கெட் விளையாட வேண்டும் என முடிவெடுத்ததாக பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.