பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு நின்ற யோகிபாபு - சோகத்தில் ரசிகர்கள்

Yogibabu Murungaikai chips
By Petchi Avudaiappan Sep 14, 2021 12:59 AM GMT
Report

 இயக்குநர் பாக்யராஜ் ஆபீஸில் பல நாட்கள் வாய்ப்பு கேட்டு நின்றிருந்ததாக நடிகர் யோகி பாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் யோகி பாபு ரஜினிகாந்த், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார். யோகி பாபு தற்போது சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளிபீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் பாக்யராஜ் ஆபீஸ் வாசலில் வாய்ப்பு கேட்டு பல நாள்கள் நின்று இருக்கிறேன் என்றும் கடந்த கால நினைவுகளை தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடித்த சித்து +2 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன்.ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பேன். இன்னும் நீங்கள் எத்தனைப் படம் பண்ணாலும் உங்களுடன் நான் நடிப்பேன் என யோகிபாபு கூறியுள்ளார்.