யோகி பாபு படத்தை தடை செய்யுமாறு ராணிப்பேட்டை முடிதிருத்தும் தொழிலார்கள் புகார் மனு அளித்துள்ளனர்
யோகி பாபு நடிப்பில் வெளியாகியுள்ள மண்டேலா திரைப்படத்தை தடைசெய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர் .
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் தற்போது யோகிபாபுவின் நடிப்பில் வெளியாகியுள்ள மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபுவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மண்டேலா. இந்த திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தி பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால், அவை தமிழகம் முழுவதும் உள்ள 40 லட்சத்திற்கும் அதிகமான முடிதிருத்தும் தொழிலாளர்கள் இன் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக சரிக்கு சமமாக அமரக்கூடாது, கழிவறையை சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய முடிதிருத்தும் தொழிலாளர்கள், உடனடியாக மண்டேலா திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி மனுவை அளித்துள்ளனர்.