நடிகர் யோகி பாபுவை தித்திக்க வைத்த தீபாவளி - பெண் குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சி
நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் பிசியான யோகி பாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை காட்டிலும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் யோகி பாபு. விஜய், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரின் காமெடி நடிப்பு பலரது ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
நயன்தாரா, ஷாருக்கான், விஜய் சேதுபதி நடிக்கும் ஜவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பெண் குழந்தை பிறந்தது
யோகி பாபு கடந்த 2020 ஆம் ஆண்டு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாகன் என்ற மகன் உள்ள நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தீபாவளி அன்று யோகி பாபுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் அவர் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த யோகி பாபுவின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil