கிரிக்கெட் பந்துகளை சும்மா தெறிக்க விட்ட யோகி பாபு - வைரல் வீடியோ
நடிகர் யோகி பாபுவிற்கு கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. நடிகர் யோகி பாபு தற்போது முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. சிறு வயதிலிருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் யோகி பாபு. இவர் கால்பந்து மற்றும் கிரிக்கெட் மீதான தனது அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது அவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவர் எதிரில் வரும் பந்துகளை அடித்து நொறுக்குகிறார். யோகி பாபுவின் இந்த மாஸ் வீடியோ, நெட்டிசன்களின் அன்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
— Yogi Babu (@iYogiBabu) March 8, 2021