கோவையில் யோகி ஆதித்யநாத் பேரணியில் பதற்றம்: பாஜகவினர் கல்வீச்சு
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கலவரம் நடந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. கோவையில் நேற்று தேர்தல் பரப்புரையாற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்தார்.
இதை தொடர்ந்து பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இஸ்லாமியர்கள் சிலர், ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் வீதி, பெரிய கடை வீதிகளில் கடைகள் மூடினர். சில இடங்களில் போலீசாரே பாதுகாப்பு காரணங்களுக்காக கடைகளை கட்டாயப்படுத்தி மூட வைத்ததாக கூறப்படுகிறது. சில மணிநேரத்தில், யோகி ஆதித்யநாத் பேரணி, சுங்கம், அரசு மருத்துவமனை வழியாக டவுன்ஹால் வந்தபோது பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.
அந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் சிலர் சாலையில் சென்றப்போது அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் எதிர்கோஷமிட்டனர். பின்னர் திறக்கப்பட்டிருந்த ஓரிரு கடைகளையும் அடைக்கக்கூறி பாஜகவினர் தகராறு செய்தனர். அப்போது பேரணியில் ஒருவர் கடைகளை அடைக்க சொல்லி கல்லை எடுத்து செருப்பு கடைக்குள் வீசினார்.
கையில் மற்றொரு செங்கல்லை எடுத்து மீண்டும் வீச முயன்றார். அவர், கல் வீச்சு வீடியோ காட்சி, சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து கட்சிகாரனும் தான் பிரச்சாரம் பண்றான் எவனாவது இப்படி பொது அமைதியை நோண்டுறானா ?
— Stalin Jacob (@stalinjacka) March 31, 2021
யோகி வரான் னு கோவை டவுன்ஹால் பகுதியில் பாஜக கட்சிகாரர்களின் அட்டூழியம்! pic.twitter.com/JtWchlt6WQ