ஷாரியத் சட்டப்படி முடியாது இந்திய சட்டப்படிதான் ஆள முடியும் : யோகி ஆதித்யநாத்

karnataka yogiadiyanath hijab
By Irumporai Feb 14, 2022 06:49 AM GMT
Report

இந்தியா அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியாத் இஸ்லாமிய)சட்டத்தால் அல்ல உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 55 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டி ஒன்று மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது: இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது.

நமது பிரதமர் மோடி, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார். அந்த மகளுக்கான மாண்பை உறுதி செய்யவே நமது தேசம் அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியத் சட்டத்தால் அல்ல எனக் கூறியுள்ளார்.

மேலும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி, இந்தியாவில் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராவார் எனக் கூறியுள்ளார். நான் அதைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ள யோகி

ஆதித்யநாத் நான் மீண்டும் கூறுகிறேன், இது புதிய இந்தியா. உலகளவில் பிரபலமான தலைவரைப் பிரதமராகக் கொண்ட புதிய இந்தியா. இந்த புதிய இந்தியா உலகம் இருக்கும்வரை அரசியல் சாசனப்படி மட்டுமே ஆளப்படும்.

தலிபான் மனப்பான்மை கொண்ட சில மதவெறியர்களின் எண்ணங்கள் என்றுமே நிறைவேறாது எனக் கூறியுள்ளார் கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று நிலையில் , உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.