உ.பி. முதலமைச்சருக்கு கோவில் கட்டி கற்பூரம் ஏற்றி வழிபாடு - வைரலாகும் வீடியோ

Viral Video Uttar Pradesh Yogi Adityanath
By Nandhini Sep 19, 2022 08:49 AM GMT
Report

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு அயோத்தியில் நபர் ஒருவர் கோயில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்திய இந்து சமயக் குருக்களும், இந்துத்துவத்தை அடையாளப்படுத்தும் அரசியல்வாதியுமாவார். சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் பதவியை கைப்பற்றினார். 

கோவில் கட்டிய நபர்

இந்நிலையில், உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ஆதரவாளரான பிரபாகர் மவுரியா என்பவர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளார். 

கோவிலில் பிரபாகர் மவுரியா முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிலைக்கு கற்பூரம் ஏற்றி, தீபராதனை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

தற்போது இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

yogi-adityanath-cm-temple-viral-video