NepalPlaneCrash : நேபாள விமான விபத்து.. பலியான இந்திய பயணிகள் - வெளியான அதிர்ச்சி வீடியோ
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை எட்டி ஏர்லைன்ஸ்' விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.
விமான விபத்து
விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது. இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. விமானத்தில் இருந்த 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேருமே இறந்து விட்டதாகவும் யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
नेपाल प्लेन हादसे से पहले फेसबुक का लाइव वीडियो#NepalPlaneCrash pic.twitter.com/N7lyXS8HEV
— Dhyanendra Singh (@dhyanendraj) January 15, 2023
பலியான இந்தியர்கள்
விபத்துக்குள்ளான விமானத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்களை தவிர 10 வெளிநாட்டவர்கள் இருந்தனர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
விபத்து வீடியோ
அவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷியர்கள், 3 கொரிய நாட்டினர், அர்ஜென்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் விபத்தடைந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது