ஏற்காடா இது? ஒரு நாள் பெய்த மழைக்கே இவ்வளவு ரம்மியமா இருக்கே! பொதுமக்கள் வியப்பு!
rain
yerkaud
mist
By Anupriyamkumaresan
ஏற்காட்டில் நேற்று பெய்த கனமழையால் பகல் நேரத்திலேயே பனி சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது. சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி இயற்கை வளம் மிகுந்த பகுதியாகும்.
கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பனிகள் சூழ்ந்து பனி மூட்டமாக காணப்பட்டது.
இதனால் ஏற்காடு மலை ஏறும் சாலைகளிலேயே மழை வெள்ளம் ஓடியதால் நீர் வீழ்ச்சி போல் காட்சியளித்தன. இந்த குளிர்ச்சி மிகுந்த சூழலில் ஏராளமான பூக்கள் வண்ணமயமாக பூத்து குலுங்கின. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.