ஏமன்-சவுதி கூட்டுப்படைத் தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலி
ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நேற்று முந்தினம்(நவ.17) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் மரிப் மற்றும் அல்-பைதா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 130 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 16 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து கூட்டுப்படையினர் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1200 பேர் வரை பலியாகியிருக்கிறார்கள்.
முன்னதாக கடந்த நவ.6 அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 145 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை IBC Tamil
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan