ரம்ஜான் இலவச பொருள் வாங்க குவிந்த கூட்டம்; 85 பேர் பலி - 322 பேர் படுகாயம்
நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர்.
இலவச பொருள்
ஏமனில் ரமலானை முன்னிட்டு சனாவில் மொயின் பள்ளிக்கு அருகில் உள்ள அல்-குபஸ் சந்தையில் அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
இதில் பங்கேற்க பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. அதனால், பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 85 பேர் பலியாகி உள்ளனர். 322 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சி கும்பல், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டது.
85 பேர் பலி
இதனால் அஞ்சிய பொதுமக்கள் சிதறி ஓடினர். இதுவும் உயிரிழப்பிற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் எனவும் கூறப்படுகிறது.
அதனையடுத்து இலவச பொருட்களை விநியோகித்த 2 வணிகர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.