இந்தியாவில் எமதர்மன் வேடம் அணிந்து கொரோனா விழப்புணர்வு.. எங்கே நடக்கிறது?
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உலக அளவில் இந்தியாவில் தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு இடங்களில் வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு இந்தியாவில் ஒரு இடத்தில் எமதர்மன் வேடம் அணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் எமதர்மன் வேடம் அணிந்து ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, “எங்களுடைய வேலையை அதிகமாக்காதீர்கள். பூமியில் உள்ளவர்கள் கவனமுடன் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எமதர்மன் நரகத்தின் அரசனாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.