அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி
முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அபுதாபியில் ADNOC எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குக்கு அருகிலுள்ள முசாஃபா பகுதியில் மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் இருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
[
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு பாகிஸ்தானியர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.